அண்ணாமலை நீ போற்றி
அண்ணாமலையே போற்றி
அருள்வாய் சிவனே போற்றி,
எங்கள் துன்பம் நீக்கி
காப்பாய் சிவனே போற்றி,
தீயாய் நின்றாய் போற்றி
திகழ்ந்தாய் ஒளியாய் போற்றி,
கோபுர வாசலில் போற்றி
கொண்டோம் எல்லாம் போற்றி,
மலைவலம் வந்தோம் போற்றி
மலையாய் உயர்ந்தோம் போற்றி,
மாணிக்கவாசகன் போற்றி
திருவெம்பாவை போற்றி,
தந்தான் கொண்டான் போற்றி
தலைவா உன்னைப் போற்றி,
நிறைந்தாய் எங்கும் போற்றி
நின்றாய் மலையாய் போற்றி,
அண்ணாமலையே போற்றி
உண்ணாமுலையவள் போற்றி,
அண்ணாமலையே போற்றி
அர்த்த நாரிசுவரனே போற்றி,
அடியாய் அமிழ்ந்தாய் போற்றி
முடியாய் உயர்ந்தாய் போற்றி,
எரியும் தீபமே போற்றி
எங்கள் வாழ்வே போற்றி,
அருள்வாய் அப்பனே போற்றி
அண்ணாமலையே போற்றி
Comments
Post a Comment