உத்தமன் மாலவன்

மலையென நின்று மனதினை வென்று மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும்


மலையப்ப சாமியின் அருளால் இந்த 

மாநிலம் செழித்திட வேண்டும்


சென்றன சென்று நன்றென நன்று 

நம் வாசல் வந்திட வேண்டும்


செல்வத் திருமகள் சேர்ந்த மணமகன் 

மாலன் கருணை வேண்டும்


வாயில் கடந்து வாழ்ந்திட சென்று 

வாழ்வை வென்றிட வேண்டும்


வாசல் கடந்து(பரமபத) வந்திடும் மாதவன் 

மானுடம் காத்திட வேண்டும்


உணவை மறுத்து உடலை மறந்து 

உன் புகழ் பாடிட வேண்டும்


உலகை யளந்தவன் உத்தமன் மாலவன்

உன் துணை என்றும் வேண்டும்

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்