அழகன் முருகன்

அழகன் எம்முருகன் அவன் அள்ளித்தரும் கலைஞன் அவன் அன்பால் நமை தன்பால் உள்ளம்  கவர்ந்தான்  கண்ணில் நிறைந்தான் கந்தவேளே,


இறைவன் தந்த இளையோன் அவன் இனியோன் இன்னல் தீர்ப்போன் என்றும் காப்போன் 

எங்கள் குமரவேளே,


மலைமேல் ஏறிநின்றான் மறைபோல் பொருள் தந்தான் மடியில் இடம் கொண்டான் மயிலோன் சேவற்கொடியோன் 

நம் பழனிவேலே,


மண்ணாய் பெய்யும் மழையாய் பயிராய் அதன் உயிராய் நிறைவாய் என்றும் நிலையாய் 

நின்று காப்பான் முருகவேளே

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்