அன்னை மாரியம்மா
அருளும் கரமே ஆற்றல் வடிவவே அன்னை மாரியம்மா,
அன்னை உன் முகம் பார்த்து நின்றோம் என்றும் மாரியம்மா,
உயிரின் வடிவவே உலகின் கொடையே எங்கள் மாரியம்மா,
கருமேகம் போலே காட்சி கொண்டாய் நீதான் காளியம்மா,
பச்சை வண்ண ஆடை கொண்டவள் தாயே மாரியம்மா,
பாசம் வளர்த்து பண்பை தருவாள் பாவை மாரியம்மா,
மஞ்சள் மாலை மணக்கும் சந்தணம் கொண்டாள் தேவியம்மா,
மனதை தேற்றி மாண்புகள் தருவாள் தங்க காளியம்மா,
அன்னை மாரியம்மா! அருள் புரிவாய் காளியம்மா! எங்கள் மாரியம்மா!
என்றும் காப்பாய் காளியம்மா!
Comments
Post a Comment