ரங்கா ரங்கா பாண்டுரங்கா
ஓடி வந்தேன் ரங்கா ரங்கா
உனைத் தேடி வந்தேன்
பாண்டு ரங்கா ரங்கா
ஆற்றங்கரை தன்னில் விளக்கேற்றி
அழகாய் நீரில் மிதக்கவிட்டு
நகரும் அழகை பார்த்திருந்தேன்
நாராயணன் புகழ் பாடி நின்றேன்
ரங்கா ரங்கா எம் ரங்கா
பண்டரிபுரம் வாழ் பாண்டு ரங்கா
பாடி உன்னை நாடி வந்தேன்
பாண்டு ரங்கனை காண வந்தேன்
மோதும் கூட்டம் கடந்து வந்தேன்
மோகனன் அழகை காண வந்தேன்
கண்டேன் கண்களில் உனைக் கண்டேன்
கடலின் வண்ணன் உயிர் கொண்டேன்
பாண்டு ரங்கனை பாடி நின்றேன்
பகலும் இரவும் மறந்து நின்றேன்
ரங்கா ரங்கா எம் ரங்கா
பண்டரிபுரம் வாழ்
பாண்டு ரங்கா
Comments
Post a Comment