கிருஷ்ணா வந்து தா
கிருஷ்ணா வந்து தா
கிருஷ்ணா வந்து தா
உன் கைநிறைய அள்ளி அள்ளி
கிருஷ்ணா வந்து தா,
குழலின் ஓசையும்
கன்றின் நேசமும்
கண்கள் காணும் காட்சியாக
கிருஷ்ணா அள்ளித் தா,
நீலவானையே வண்ணமாக்கியே
நிலவின் முகம்
கொண்ட கோலம்
நீயும் அள்ளித் தா,
கண்ணில் காதலும் கழுத்தில் மாலையும்
உள்ளம் கொள்ளும் புன்னகையும்
எமக்கு அள்ளித் தா,
நித்ய கண்ணனே
நினது மடியிலே
நின்று ஆடும்
அருமை வாழ்வை
அள்ளி அள்ளி தா
Comments
Post a Comment