ஈசன் மகேசன்
வெள்ளிப் பனி சடையன்
விதி வெல்லும் திருக் கடையன்
கண்ணில் ஒளிர் தீயன்
வளர் கங்கையவள் கொண்ட நேயன்
மண்ணில் அவன் மாயன்
திரு மாலன் கரம் தந்த மாமன்
வண்ண மலர் அணி சோமன்
மகிழ் வாழ்வின் உயிர் தரும் காமன்
தன்னில் உமை கொண்ட பாகன்
தாய் தனை போல் எங்கள் ஈசன்
Comments
Post a Comment