மேய்ப்பவர் யேசு

இரட்சிக்க வந்தவர் யாரோ குழந்தை 

யேசு தானோ

தந்தவள் காத்தது யாரோ 

மாதா மேரி தானோ


அன்பெனும் விதையின் வேரை ஆழ விதைத்தது நீரோ

மேய்ப்பன் யேசு உன் பேரோ


ஆயிரம் தலைமுறை தாண்டி 

பாபம் தீர்க்கும் நீரோ

அதுவே அன்பெனும் ஆறோ


இதயத்தின் வாசலில் என்றோ

வந்தெமை காத்தது நீரோ


என்றும் என்றும் எம்மை

ஏந்திடும் கரமே உம்மை

ஏற்றோம் ஏற்றோம் உண்மை

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்