பாண்டு ரங்கா விட்டல்லா
விட்டல்லா விட்டல்லா பாண்டு ரங்கா விட்டல்லா
பாடி வந்தோம் நாடி வந்தோம்
பண்டரிபுரம் விட்டல்லா
உச்சி முதல் பாதம் வரை உன்னழகே விட்டல்லா
கண்குளிர பார்த்து நின்றோம் கண்ணா எம் விட்டல்லா
கண்டு எம்மை காத்திருப்பாய் காதலனே விட்டல்லா
காலை மாலை மறந்து போனோம் கண்ணனே விட்டல்லா
பொன்னின் நகை சூடி நின்றாய் பரந்தாமா விட்டல்லா
பொன் மனதில் ஏற்றி வைப்பாய் என்றும் எமை விட்டல்லா
Comments
Post a Comment