குரு ராகவேந்திர
என்றென்றும் ஒளியாக நீ வாராய் - எங்கள்
கண் ணென்றும் ஏங்கிடும் நீ வாராய்
மண் நின்று வாழ்ந்திட வரம் தாராய் - எங்கள்
மத்வரின் சீடரே நீ வாராய்
வானின் ஒளியாக முன்வந்து வரம் தந்தான்
மூல ராமனே முன்நின்று கரம் கொண்டான்
தணியாத அருள்தாகம் தனைக் கண்டான்
தன்னையே தந்துனக்கு அதை வென்றான்
காணாத ஒளிகாண கண்தந்தாய் -எங்கள்
காவலனாய் காத்திருந்து வழிதந்தாய்
மண்மீது வாழ்வதில் ஓர் பயன் தந்தாய் -எங்கள்
மத்வரின் சீடரே நீ எமை வென்றாய்
Comments
Post a Comment