எங்கள் செல்ல விநாயகன்
பச்சை வண்ணம் கொண்ட வெற்றிலையும்
மஞ்சள் முகம் கொண்ட மலர் நிறமும்
என்றும் ஒளிதரும் நெய் விளக்கும்
உன்முன் பணிந்திடும் இருகரமும் ,
வேழமுகம் கண்டு விழிகசியும்,
வேண்டும் வரம்பெற்று மனம் நிறையும்,
விண்ணில் பிறந்ததிட்ட முழுநிலவும்,
மண்ணில் இறங்கி
உனைக் காட்டும்,
எங்களின் செல்ல நாயகனே நீ
என்றும் அருளும் விநாயகனே,
எங்கள் விநாயகனே
விக்ன விநாயகனே
Comments
Post a Comment