குரு ராகவேந்திர
நீரின்றி வேரில்லை நிலமின்றி பயிரில்லை நீயின்றி நானில்லை குருவே
நின் காலடி சரணம் குருவே
ஒளிதரும் விளக்கினில் உருகிடும் நெய்யது
உன் முகம் பார்த்திட உருகிடும் மனமது
கண்ணொளி காட்டிடும் கருணையின் ஒளியது
கண்டதும் விலகிடும் வாழ்வதன் இருளது
தோளது கொண்ட துளசியின் மாலையில் தூரம்
தொலைந்திடும் துன்ப பிணியது
கனிந்திடும் உன் மனம் காட்டிடும் உன் கரம் வழியை
நடந்திடும் கால்கள் மறந்திடும் வலியை கடந்திடும் வாழ்வின் சுமையை
Comments
Post a Comment