பாலகன் யேசு

பாலகன் ஏசு அவள் கரங்களிலே,

மாதா மேரி அவன் பார்வையிலே,

உள்ளம் கொள்ளும் காட்சியிதே,

உண்மை சொல்லும் சாட்சியிதே,


கன்னி மேரியின் கனவினிலே 

காலம் விதைத்த விதையிதுவே,

விதையில் வளர்ந்து மரமாகி 

ஏசு தந்த நிழலிதுவே,


பாவச் சுமைகளை தான்கொண்டு 

பாதை காட்டிய வள்ளல் அவன்,

சிலுவையில் சிரித்தே சிதைபட்டு 

மன்னித்தருளும் மாண்பு அவன்,

மேய்ப்பன் அவனே எம் ஏசு,

மேகத்தின் மழையே எம் ஏசு

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்