ஏழுமலையதின் தலைவன்
மண்ணைத் தாங்கி மீட்டு வந்தவன்
மலையப்பன் வேங்கடன் நீயே
பொன்னைத் தாங்கி பொருளாய் நின்றவன் பூமியின் காவலன் நீயே
ஏழு மலைகளின் தலைவன் எங்கள் இதயம் கொண்டவன் நீயே
ஏங்கும் இதயம் உன்னை காண
ஏறி வந்தோம் ஏழு மலையே
பொன்னும் மணியும் புதிதாய் வைரமும்
மின்னும் மேனி உன்னழகே
பொல்லா வினையும் தீர்க்கும் கரமே
போதும் என்றது மனமே
கண்ணுக் கழகாய் காட்சி தந்தாய்
காக்கும் கண்ணனே நீயே
காலம் மறந்து கண்கள் கரைந்து
கண்டு மகிழும் உயிரே
என்றும் கண்டு மகிழும் உனை யெங்கள் உயிரே
Comments
Post a Comment