அண்ணாமலை யானே

 ஒளியை தந்தவன்

விழியில் நின்றவன் 

உலகின் விடியல் யாரு,


கண்கள் திறந்தவன்

 தீயை உமிழ்ந்தவன் 

உயிரின் தத்துவம் பாரு,


 இறைவன் அவனைப் பாரு, 

ஈசன் என்பது பேரு,

இறைவன் அவனைப் பாரு 

ஈசன் என்பது பேரு,


அடியாய் முடியாய் 

 வளர்ந்து நின்று 

ஆணவம் தணித்தவன் யாரு

அண்ணாமலை போய் பாரு 

உண்ணாமுலையுடன் பாரு,


சடையும் முடியும்

 நீரும் நெருப்பும்

 தோலும் சாம்பலும் சொல்லும் செய்தி யாது


 சுந்தர வதனமும்

 சூடும் முடியும்

 முடிவில் சாம்பல் பாரு,


ஆடும் நடனம் பாரு 

அவன் அற்புத கோலம் பாரு ஓடும் துன்பம் பாரு நீ உண்மை உணர்ந்து பாரு

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்