கலையின் வாணி

வெள்ளையுள்ளம் தந்தாய் தாயே 

வேண்டும் அறிவை தருவாய் நீயே 

கையில் வீணை கொண்டவள் நீயே 

கலையின் வாணி அருள்வாய் தாயே,


காலைக் கதிரவன் காட்டும் ஒளியே 

மாலை மதியின் மயக்கும் மொழியே 

தேடும் கண்களில் காட்சியும் நீயே 

தெளிந்த ஓடையின் ஓசை தாயே,


கரத்தில் ஏடுகள் கொண்டாய் தாயே 

கவிதை ஆயிரம் தந்தாய் நீயே,

கல்வி கேள்வி ஞானம் தந்து 

காக்கும் தாயே கலையின் வாணி 


கால்கள் பணிந்தோம் கரங்கள் குவித்தோம், 

காப்பாய் நீயே கலையின் வாணி

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்