கணபதி
கண்ணுக்குள் நிறைந்த கடவுளைப் பாரு
கணபதி இன்றி வேறிங்கு யாரு
மண்ணுக்குள் விளைந்த மஞ்சளின் வேரு
மங்கல வடிவாய் நம் பிள்ளையாரு
நம்பிக்கை தரும் அவர் தும்பிக்கை பாரு
நல்லது தொடங்க முன் வருவாரு
நெற்றியில் நீறுடன் பலம் தரும் மேரு
நிலமகள் தந்த செல்வத்தின் பேரு
தடையின்றி செல்ல வழி தந்த தாரு
தாங்கிடும் கணபதி தோள் தருவாரு
Comments
Post a Comment