வடிவேலன்
எரிகின்ற விளக்கொன்று தருகின்ற சுகம் போல
எம் வேலன் முகம் தந்தது
என் உணர் வெல்லாம் நெய்யாகி
வளர்தீப தீயாகி முருகா உன் முகம் கண்டது
வேல் ஏந்தும் கரம் ஒன்று வினை தீர்க்கும் கரம் ஒன்று
முன் நின்று எமைக் காத்தது
மதயானை தோள்மீது நீ கொண்ட மலர்மாலை மணம் சூழ்ந்த வாழ்வானது
வரும் நேரம் எல்லாமே வளமான பொன் நேரம்
வடிவேலன் நீ தந்தது
வருவாய் எம் அழகா நீ அருள்வாய் எம் குமரா நீ
கரம் கூப்பி முன் நின்றது
Comments
Post a Comment