சிம்ம ரூபனே
தாமரை மலராய் தாயை தாங்கும்
தங்க கரங்களே சிம்ம ரூபனே,
கண்களின் கனலில் காவல் தெரியும்
கரங்களின் அணைப்பில் கருணை புரியும்,
சிம்ம ரூபனே சீறும் சிங்கமே
எங்களைக் காப்பாய் இந்த தருணமே,
காற்றில் நீளும் காலனின் கரங்களை
பாய்ந்து பிடித்தே தடுப்பாய் நீயே
காப்பாய் எமையே,காலனை வென்றே,
மனதில் நேர்மை உடலின் தூய்மை
உள்ளம் உணரும் உந்தன் வலிமை,
எங்கும் எதிலும் உந்தன் தோற்றம்
எதனையும் வெல்லும் வலிமையின் நாமம்,
நம்பிய உயிரை காக்கும் நாமம்
நாராயணா எனும் நரசிம்ம நாமம்,
நாராயணா நாராயணா நானிலம்
காப்பாய் நாராயணா
Comments
Post a Comment