கந்தன் நினைவே என்றிரு
கவலை மறந்திடு கனவை தொடர்ந்திடு கந்தன் நினைவே என்றிரு
வேலை வணங்கிடு வேசம் கலைத்திடு வேடன் வருவான் என்றிரு
வள்ளி மணாளன் வருவான் என்றிரு
கடலின் ஓசையில் கந்தன் புகழதில் கருணை மழையதில் நனைந்திரு
கந்தன் கருணையில் காட்டும் அன்பதில் கவலை பறந்திடும் உணர்ந்திடு
வேலின் கூர்மையில் கொண்ட நேர்மையில் சூரன் வீழ்ந்தான் பார்த்திரு
வேண்டும் வேளையில் வேலன் பார்வையில் வேதனை இல்லை என்றிரு
வேலவன் காப்பான் என்றிரு
கந்தன் அவனை நினைத்திரு
Comments
Post a Comment