அன்னை கங்கை யம்மன்

 அழகு அழகு பேரழகு கங்கையம்மன் நீ பேரழகு

    

உன்னைப் பார்க்கையில் கண்ணழகு 

உன் புகழ் பாடும் குரலழகு


உன்னை தேடிய காலழகு

உன் முன் வணங்கும் கரமழகு


உன்னை நினைக்கையில் மனமழகு

உன் முன் நிற்கும் உடலழகு


உன்னை காட்டும் விளக்கழகு 

உன் முன் ஒலிக்கும் ஒலியழகு


உன்னை அணைக்கும் உடையழகு 

உன் முன் மலர்ந்த மலரழகு


உன்னை போற்றும் மொழியழகு

உன்னால் தானே உலகழகு


உண்மையில்  அதுவே உன்னழகு

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்