அழகு முருகன் வேலவன்

அழகு முருகன் அன்பு முருகன் அருமை முருகன் வேலவன்,

கனவை தாங்கி கண்கள் திறந்து கவிதை போலே வாழ்பவன்,


பாலின் வெண்மை கயலோ கண்மை உள்ளம் தேனாய் இனிப்பவன்,

உதட்டின் ஓரம் உருக்கும் புன்னகை உயிர் கலந்து தருபவன்,


எங்கள் ஈசன் இனிய செல்வன் என்றும் காவல் கொள்பவன்,

கையில் வேலுடன் கண்கள் திறந்து காலமெல்லாம் காப்பவன்,


பாதம் பணிந்தோம் பாசம் கொண்டோம் பாலமுருகா உன்னிடம்,

பனியை விலக்கி ஒளியை தருவாய் பாலன் நீயே என்னிடம்

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்