அன்னை சிவகாமி
அண்டம் முழுவதும் ஆட்சி செய்வாள் அவள் அன்னை சிவகாமி,
ஆயிரம் கரங்கொண்டு அருளைப் பொழிவாள் அன்னை சிவகாமி,
பச்சை வர்ணமாய்பாடும் கிளியொடு பார்க்கும்காளியவள்,
பார்க்கும் கண்களில் பாசத்தை காட்டும் பார்வதி தேவியவள்,
எத்தனை முகங்கள் ஏந்திழை கோலங்கள் காக்கும் தெய்வமவள்,
அசுரரை வெல்ல ஆயிரம் முகங்கொண்ட அற்புத தோற்றமவள்
அன்னை தேவியவள் அற்புத தாயுமவள்,
விண்ணை மண்ணை வென்று நிலைக்கும் எங்கள் தாயுமவள்,
காக்கும் தாயுமவள் கருணை தெய்வமவள்
இன்றும் என்றும் சேயைக் காக்கும்
சிவகாமி யன்னைவள்
Comments
Post a Comment