அன்னை லலிதாம்பிகை
எங்கள் தாயின் இனிய முகம்,இனிதாய் எதையும் தந்தருளும்,
அழகின் அற்புத அவள் கோலம்,அள்ளி தந்திடும் ஆறாகும்,
பனியாய் சிகரம் தனைமூடும் பளிங்கு வண்ணம் அவள் தோற்றம்,
உருகி ஆறாய் நமைக் காக்கும் உள்ளம் அவளின் பெருவெள்ளம்,
வானின் விண்மீன் தரையிறங்கி தாயின் நகையாய் தான் அமரும்,
தங்க நிலவு பிறை காட்டி தாயின் உதட்டில் தவமிருக்கும்,
காலை கதிரவன் செவ்வானம் தங்கத் தாயின் மேல் தவழும்,
கருனை மழையாய் தாய் விழிகள் கண்திறந்தே நமைக்காக்கும்
Comments
Post a Comment