தாயே நீ மாரி
கண்கள் காண ஒளியைத் தந்தவள்
தாயே நீ மாரி,
காலகாலமாய் கண்ணாய் காப்பவள்
தாயே நீ மாரி,
அற்புதங்கள் ஆயிரம் செய்யும்
தாயே நீ மாரி,
ஆடியில் உன்னை நாடி வந்திடும்
சேயை பார் மாரி,
ஆற்றின் கரைதனில் ஈரமில்லையே
தாயே கருமாரி,
ஆடியிலே மனம் வாடி நின்றோம்
தாயே கருமாரி,
காணவில்லையே காற்றின் வேகம்
தாயே அருள்மாரி
காட்டிடு கருணையை கரிய மேகமாய்
தாயே அருள் மாரி,
சாரி சாரியாய் பாடி வருகிறோம்
தாயே கருமாரி,
சமய புரத்தாளே காத்திடு எம்மை
தாயே நீ மாரி
Comments
Post a Comment