குரு ராகவேந்திர

இராம நாமம் தந்த ஞானம் உன்னில் உன்னை கண்டதே

ராகவேந்திரா என்னும் நாமம் எம்மை எமக்கு தந்ததே


ராகவேந்திரா ராகவேந்திரா ராகவேந்திரா நாமமே

நாளும் வாழ்வின் கவசமாக எம்மை காத்து நின்றதே


நீ சூடும் மாலை சுகந்தம் நின்று வாடும் வாழ்வை நீக்குமே

நின் நெஞ்சில் சுமக்கும் மூல ராமன் வாழும் வழியை காட்டுமே


மனித வாழ்வின் மகிழ்வை உந்தன் 

மந்தி ராலயம் கூட்டுமே

மண்ணின் ஞானி உன்னைத் போற்றி 

மனிதர் உள்ளம் பாடுமே


ராகவேந்திரா ராகவேந்திரா ராகவேந்திரா நாமமே


நாளும் நாங்கள் உன்னைப் பாடும் 

நன்மை செய்யும் கீதமே

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்