அபயம் நீயே ராமா ராமா
அம்மா அப்பா என்றே உதடு அன்புடன் உச்சரிக்கும்
அபயம் வேண்டில் அதுவே உடனே ராமா என்றழைக்கும்,
அன்னையின் அன்பாய் தந்தையின் கரமாய் காக்கும் நாமம் இதே
ராமா ராமா ராமா ராமா அபயம் என்றும் நீயே,
அற்புத வேள்வியில் அன்னையின் கருணையில் கண்டது உனை உலகம்
காதல் சீதையில் கானகம் மீண்டதில் காத்தது உனது தர்மம்
ராமா ராமா ராமா ராமாஅபயம் என்றும் நீயே,
அருமை தம்பிகள் ஆருயிர் தோழர் அணைக்கும் உன் கரமே
அஞ்சனை மைந்தன் ஆஞ்சனேயன் பாடும் ராகவனே,
ராமா ராமா ராமா ராமாஅபயம் என்றும் நீயே
Comments
Post a Comment