எம் அழகன் முருகன்

எம் அழகன் பொன் அழகன் எங்கள் குல வேலன் 

வந்து முன்னே காத்திருப்பான் வள்ளி மணவாளன்


ஆறுபடை வீடு கொண்ட அழகன் அவன் முருகன்

அழகு மயில் வாகனத்தில் ஏறி வரும் சூரன்


வேல் எடுத்து வினை தீர்க்கும் வேந்தன் செந்தூர் வேலன்

வெற்றி மாலை தோள் நிறைக்கும் தெய்வம் அவன் அழகன்

காவடிகள் ஆடிவரும் கால்கள் மலை ஏறிவரும்

கண் திறப்பான் முருகன்

காவலாக என்றும் வரும்

கவலை யில்லா வாழ்வு தரும் 

கருணை அவன் முருகன்

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்