ஈசனே எம் நேசனே

மங்கள நாதனே 

மறை கண்ட மாயனே 

திரு மங்கலகுடி வாழ் ஈசனே


எம் உள நேசனே இமயத்தின் வாசனே

நின் றெமை காக்கும் ஈசனே


ஈசனே ஈசனே எம் நேசனே


கடல் அன்று உமிழ்ந்த விடம் தனை உண்டு விண்ணவர் காத்த நேசனே


கண்ணப்ப நாயனின் கண்களில் நின்று

கருணை செய்த ஈசனே


ஈசனே ஈசனே எம் நேசனே


மலைமகள் கொண்டு மண்ணில் நின்று

மனதினை வென்ற ஈசனே


மாலைகள் சூடி மலர்கள் தூவி

மறந்தெமை நின்றோம் ஈசனே


ஈசனே ஈசனே எம் நேசனே

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்