ஈஸ்வரனே பரமேஸ்வரனே
நின் விழி தரும் ஒளியில் விலகிடும் இருளது எங்கள் ஈஸ்வரனே
நின்னருள் தரும் வழியில் நிதம் உன்னைத் தேடி நடந்திடும் கால்கள் ஈஸ்வரனே
உருவொன்று கொண்டு உணர்வினில் நின்று உலகத்தை காத்திடும் ஈஸ்வரனே
அருவமாய் வந்து அருகினில் நின்று அண்டத்தை காக்கும் பர மேஸ்வரனே
வாழ்வதை தந்து வாழ்ந்திட நின்று வழிசொல்லி அழைத்திடும் ஈஸ்வரனே
கனவொன்று காட்டி நனவொன்று நடத்தி கடைசியில் கலைத்திடும் பர மேஸ்வரனே
உலகென்ற ஒன்று உயிர் தந்து இன்று உறவினில் நின்றது ஈஸ்வரனே
உயிர் கொண்ட உடலது உலகதை மறந்து உன்னுடன் கலந்தது பரமேஸ்வரனே
ஈஸ்வரனே பரமேஸ்வரனே
பணிந்திடும் விழிகளில் பாதையின் இருளதில்
ஒளிதந்து வழி நிற்பாய் ஈஸ்வரனே
Comments
Post a Comment