அனுமன் தானம்மா

இந்த மண்ணில் பிறந்த மானுடம் காத்த வீரன் தெரியுமா?

அவன் அன்பால் கரைந்து அரவணைத்த கரங்கள் எதுவம்மா?

உனக்கு தெரியுமா?


கார் மேகம் கண்டெடுத்த நிலத்தைப் போலவே,

கார் வண்ணன்  அடிமை கொண்ட வீரன் அவனம்மா,

அஞ்சனையின் அருமை செல்வன் அனுமன் தானம்மா!


நிழலாகி கருணை செய்யும் தருவைப் போலவே,

அவன் உளம் புகுந்து அமைதி தந்தவன் ராமன் தானம்மா!

மாலவனின் அவதார ராமன் தானம்மா!


மறைத்து வைத்த வைரமதை கடலை தாண்டியே ;

கண்டு சொன்ன கடமை வீரன் அனுமன் தானம்மா!

அரக்கர்களின் ஊர் எரித்த ஆற்றல் தானம்மா!


பாய்ந்து விழும் அருவியைப் போல் பாதை காட்டியே; 

பாசம் கொண்ட தலைவனவன் இராமன் தானம்மா! 

அன்னை சீதை அண்ணல் அவன் ராமன் தானம்மா!


அனுமன் தானம்மா! இராமன் அடிமை  தானம்மா!

அனுதினமும் அரவணைப்பான் அனுமன் தானம்மா!

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்