ராமன் ராமன் ராமன் அழகு
ராமன் ராமன் ராமன் அழகு
ரகுவம்ச தோன்றலே அழகு,
ரட்சிக்கும் கரங்கள் அழகு
ராமசந்திர மூர்த்தி அழகு
நீலவண்ண மேனியன் அழகு
நெற்றியின் திருநாமமும் அழகு,
வில்லும் அம்பும் தோளின் அழகு,
தோளின் மாலை உண்மையில் அழகு
தந்தை துயர் துடைத்தது அழகு
தாயின் வாக்கு காத்தது அழகு
தம்பிகள் மீதவன் பாசம் அழகு
தாங்கி நிற்கும் ராமன் அழகு
ஆருயிர் சீதையை மீட்டது அழகு
அதிலே சொன்ன பாடம் அழகு
அனுமன் கண்ட ராமன் அழகு
அற்புதம் அற்புதம் ராமன் அழகு
ராமன் ராமன் ராமன் அழகு
ராமன் ராமன் ராமன் அழகு
Comments
Post a Comment