ஆதிரை ஈசன்
கண்ணார கண்டோம் உன்னையே
நின்னையே ஈசனே
திரு ஆதிரை நாளதில் ஊர்திரை நீக்கியே
கண்ணார கண்டோம் உன்னையே
தாயவள் பக்தையின் தவிப்பதை நீக்கியே
சேந்தனின் உயிரதை பூமியில் நிறுத்தியே
தந்த எம் ஈசனின் காலடி போற்றியே
கண்ணார கண்டோம் உன்னையே
ஆடிய பாதத்தில் அருள் தரும் கரமதில்
தேடிடும் விழியுடன் தேவாரம் பாடியே
கண்ணார கண்டோம் உன்னையே
களியுண்ண வந்தவன் காட்சியில் மயங்கியே கலியின்று கீர்த்தியும் என்றுனை எண்ணியே
கண்ணார கண்டோம் உன்னையே
நின்னையே ஈசனே
Comments
Post a Comment