சுவாமி ஐயப்பன்

தரணியாள வந்து நின்றான் சுவாமி ஐயப்பன்

தகப்பன் சுவாமியின் தமையனான் சுவாமி ஐயப்பன்


எங்கள் இதயக் கோயில் வாழும் உயிராய் எங்கள் ஐயப்பன்

ஏழு மலையான் தந்த செல்வம் சபரி ஐயப்பன்


புலியின் மீது ஏறி வருவான் எங்கள் ஐயப்பன்

புவியில் யாரும் தேடி வணங்கும் தெய்வம் ஐயப்பன்


கண்ணுக் கழகாய் காட்சி தந்திடும் குழந்தை ஐயப்பன்

காண வந்திடும் கூட்டம் காக்கும் கருணை ஐயப்பன்


சாமி சரணம் சாமி சரணம் சாமி ஐயப்பா

சரணம் நீயே சரணம் நீயே சாமி ஐயப்பா

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்