தாயுமானவன்
அன்பு கரங்களில் அருமை குழந்தைகள்
அம்மையப்பனின் அருமை குழந்தைகள்
தாயின்மடிதனில் தந்த நாயகன்
தகப்பன் கரங்களில் பாலன் வேலவன்
கண்கள் கொண்டது காட்சியானது
காட்சியானது கருத்தை சொன்னது
உலக வாழ்வின் உண்மையானது
உயிர்கள் வாழவே வழியுமானது
தாயின் வடிவிலே தன்னை தந்தது
தன்னை தந்ததால் தாயுமானது
தாயின் வடிவமே வாழ்வை சொன்னது
தந்தை உருவமே முடிவை சொன்னது
மழழை செல்வங்கள்
மகிழ்ச்சி தந்தது
மண்ணின் மகத்துவம் சொல்லி நின்றது
நமசிவாயமே நாங்கள் கண்டது
நமசிவாயமே நாளும் காப்பது
Comments
Post a Comment