குரு ராகவேந்திர

அன்பின் உருவாய் கண்டோம் ;ஆறுதல் கண்டதும் கொண்டோம்,

ரட்சிக்கும் கரங்கள் காட்டும் ;ராகவேந்திர குருவைக் கண்டோம்,


அச்சம் தீர்ந்தது கண்டோம்; அவனிடம் அடிமை கொண்டோம், 

அனுமன் பீமன் வழியின் தோன்றல்; மத்வரின் சீடரை மனதில் கொண்டோம்,


பாதம் பணிந்து நின்றோம்;துளசி தீர்த்தம் உண்டோம்,

நோயின்வலிகள் நொடியில் மறைய;

காக்கும் குருவின் கருணை கண்டோம்

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்