கண்ணின் ஜாலம்
கண்களிலே ஓர் மகிமை
கவி காளிதாசனின் கவிதை,
இராமன் கை கொண்ட வில்லை
உன் புருவத்தில் காணும் விந்தை,
நெஞ்சை யள்ளும் திலகம்
நிலவாய் உலவும் பாலம்
நிலவின் எழுகின்ற கோலம்
நின் செந்தூர முகம் காட்டும் ஜாலம்,
மலரின் மணக்கும் மாலை
மந்திர புன்னகை வேளை
சிந்தை நிறைந்த காட்சி
செந்தூர நிறமே சாட்சி
Comments
Post a Comment