அன்னை பனசங்கரி

 வானில் கண்டேன் உன் ஒளியை,

வாழ்வு கொண்டேன் உன்மடியில்,

பதாமி யென்னும் இடங்கண்டேன்,

பனசங்கரி யம்மா உனைக் கொண்டேன்,


கண்போல் காக்கும் தாய் உன்னை,

கானகம் நடுவில் நான் கண்டேன்,

இமயவன் அருளை தேடிநின்றேன்

உன்தாள் பணிந்தே அருள் கொண்டேன்,


பாதை தேடிய எம் கால்கள்  

பதாமி நகரில் நின்ற தம்மா,

பார்வை பாதம் பணிந்ததம்மா,

பனசங்கரி நீ எமைக் காப்பாயம்மா

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்