அன்னை மும்பாதேவி
காலங்களிலே கரைந்து நின்றவள்,
கடலின் ஓர காவல் தெய்வமவள்,
கொங்கனத்தின் தாயே எங்கள்
ஸ்ரீ மும்பாதேவி அவள்,
இருண்ட காட்டிடை ஒளிரும் ஒளியவள்,
சிங்கத்தின் சீற்றம் கொண்ட தாயவள்,
தீமையை துரத்தும் சூலமானவள்,
இடியாய் மின்னலாய் மழையாய் இறங்கி
ஈரம் விதைப்பவள்,
பயிராய் வளர்ந்து உயிரைக் காப்பவள்,
பசியைத் தீர்த்தவள் பஞ்சம் தீர்த்தவள்
பாரைக் காக்கும் ஸ்ரீ மும்பாதேவி
எங்கள் தாயவள்
Comments
Post a Comment