நமசிவாயனே

 

ஓம்

நமசிவாயனே 

நாளின் வாசனே 

நல்ல மனது தந்தாய்,

நதியின் மூலமே 

மலையின் வடிவமே 

மண்ணில் உயிரை தந்தாய்,


மலரின் வடிவிலே 

மகிழ்வை தந்த நீ 

மாயன் ஈசனானாய்,

வாழ்வின் வடிவிலே 

வடிவம் தந்த நீ 

நிலைத்த லிங்கமானாய்,


சிந்தை முழுவதும் 

நிறைந்த நினைவிலே 

நீலகண்டன் நின்றாய் 

நாங்கள் கொண்ட யெம்

வாழ்வில் நின்று நீ நமசிவாயமானாய்,


நமசிவாயனே நமசிவாயனே 

நாளும் உன்னை கொண்டோம் 

நமசிவாயனே நமசிவாயனே

 நாளும் வென்று நின்றோம்

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்