குரு ராகவேந்திர

மண்ணில் நின்ற கால்கள் இங்கே;

விண்ணை யளந்து விடை பல தந்தது,

மந்திராலய மைந்தனின் விழிகள் ;

விடியலை அழைத்தது இருளும் அகன்றது,


கைகள் நீரினை தாரை வார்த்தது;

தம்மை தந்து நம்மை காத்தது,

சந்தியில் வந்தனம் தலைவன் செய்தது;

சாயும் மனதை தாங்கி நின்றது,


குருவின் அருளால் குலமும் தழைத்தது;

கும்பிட்ட கரங்களை கண்ணீர் நனைத்தது,

நல்லவன் தந்த நாளும் இனித்தது;

நன்றியை உள்ளம் உயிராய் கொண்டது,


ராக வேந்திரா யென்னும் ராகம்;

நெஞ்சில் நிலைத்தது நாவில் இனித்தது,

நாளும் பாடும் நாமம் காத்தது;

நல்லதை யெல்லாம் அள்ளித் தந்தது,


ராகவேந்திரா;ராகவேந்திரா

ராகவேந்திரா;ராகவேந்திரா

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்