அன்னை லஷ்மி
அள்ளி தருபவள் அன்னை இவளே ;ஆறுதல் அவளே; அன்னை லட்சுமி,
ஆனந்த மழையே ;அற்புத சுடரே ;அன்னை அவளே; மகாலஷ்மி!
மண்ணின் நனைந்த மழைத்துளி வாசம்; பொன்னை விதைக்கும் கரங்களின் நேசம்,
புதிதாய் விளையும் பூமியின் உயிர்கள்; அன்னை அவள் தரும் ஆனந்த பயிர்கள்,
பஞ்சமும் பசியும் பறந்து மறைந்தது ,
பாரின் மேன்மை அன்னை தந்தது,
செல்லும் வழிதனை சொல்லித்தந்தது;
செல்வம் பெருகி செழுமை கொண்டது,
அன்னை முகமது அருளைத் தந்தது ;
வெள்ளை யானையில் வலம் இங்கு வந்தது,
கரங்கள் குவிந்து வரங்கள் தந்தது
காட்டும் மலரில் கவலை பறந்தது,
ஆனந்த மழையே ;அற்புத சுடரே ;
அன்னை அவளே; மகாலஷ்மி!
Comments
Post a Comment