சுவாமி ஐயப்பன்

பம்பை யாற்றின் படிதனில் நின்று பணிந்திடும் எங்கள் கரங்கள்

பார்த்திடும் மலைதனை விழிகள் 

சபரி மலைதனை எங்கள் விழிகள்


கல்லும் கரைந்திடும் கடுங்குளிர் நீர் அதில் கரைந்திடும் பாபங்கள் பம்பையில்


கால்கள் பலங் கொண்டு காட்டிடை கடந்திடும் களிப்புடன் ஏறிடும் மலையில் சபரிமலையில்


சரணம் பாடிடும் சரங்கொத்தி கடந்திடும் சாஸ்தாவை நாடிடும் மனமே


சரணம் சரணம் சரணம் ஐயப்பனை சந்திக்க வந்தோம் வரமே


பாதங்கள் செய்த புண்ணியம் கோடி பதினெட்டாம் படிதனில் கூடி


பாதம் வைத்தோம் உன்னை பார்த்திடவே  இங்கு ஒவ்வொரு படியாய் ஏறி


சரணம் சரணம் சரணம் ஐயப்பா 

சாமியே சரணம் சரணம் ஐயப்பா

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்