நீல வண்ணன் நினைவதிலே

பச்சை வண்ண நிறமதிலே பசியை தீர்க்கும் வயல்போலே,

பார்த்தன் ஏந்தும் கரம் பார்த்தே பாதை சொன்னான் பரந்தாமன்,


உயர்ந்து நிற்கும் கரம் காட்டும் உலக வாழ்வின் வழி கூறும்,

உள்ளம் கொள்ளும் உயர்வினையே இதயம் தொட்டு விரல் காட்டும்,


கண்ணன் கீதை தத்துவமே காலம் வெல்லும் களமாகும்,

காவல் அவனே காத்திருப்போம் கண்ணன் கீதை கேட்டிருப்போம்,


விடியும் வானினின் ஒளிதனிலே 

வளரும் பயிராய் வாழ்ந்திருப்போம்,


நிலவின் ஒளியாய் குளிர்ந்திருப்போம் நீலவண்ணன் நினைவுடனே

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்