வெற்றிலை கொடியோன்

வெண்ணெய் கவசம் பூண்டிருப்பான் வெற்றிலை கொடியோன் அனுமன் தான்,

வேண்டிய காரியம் முடித்திடுவான் இராம தூதன் அனுமன் தான்,


அனுமன்தான் எங்கள் அனுமன்தான் 

இராமதூதன்அனுமன்தான், 


கண்ணால் கண்டதும் உணர்ந்திடுவான் கவலை எதுவென அறிந்திடுவான்,

காலநேரம் பாராமல் கடிதென துயரம் துடைத்திடுவான்,


இராமதூதன் அனுமன் தான்,

இலட்சிய வீரன் அனுமன் தான்,


பாசம் கொண்ட பக்தனவன்,சீதையின் செல்லப் பிள்ளையவன்,

பாரினில் ராம பக்தரையே பலமுடன் காக்கும் பலராமன்,


பீமனை வென்ற வீரன் தான்,

ராகவன் தந்த அனுமன்தான்

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்