குரு ராகவேந்திர

மனதாலே நினைத்தாலே மனதிற்குள் விதையாகி தருவாகி 

கனி தரும் எம் ராகவேந்திரா,

எங்கள் கலிதீர்க்க காவலானாய்  ராகவேந்திரா,


கமண்டலத்தின் நீர் தெளித்து கண்ணீரைத்தான் துடைத்து 

கல்யாணக் கோலம் தந்தாய் ராகவேந்திரா,

எங்கள் குலங்காத்து குருவானாய் ராகவேந்திரா,


கைகாட்டி அபயம் தந்து கல்வி கேள்வி ஞானம் தந்து 

சபைதனிலே பதவி தந்தாய் ராகவேந்திரா,

எங்கள் அற்புதமே அருள்மழையே ராகவேந்திரா,


ராகவேந்திரா குரு ராகவேந்திரா,

ரட்சிக்கும் நாயகனே ராகவேந்திரா

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்