எங்கள் அனுமன் இங்கே

கையில் கதையுடன் 

கருணை விழியுடன் 

காக்கும் கரங்கள் இங்கே,

கடலை தாண்டியே 

தாயையை காட்டியே 

துயரைத் தீர்த்த தங்கே,


கழுத்தில் மாலையும் 

தலையில் கிரீடமும் 

தாங்கி நின்றதிங்கே, 

காதல் நாயகன் 

காலை வணங்கியே

 ஏவல் செய்ததங்கே,


பறந்து வெல்பவன் 

பத்ம கோலத்தில் 

காட்சி கொண்டதிங்கே

தெய்வ குழந்தையாய் 

ராமன் மடியிலே 

தவழ்ந்த வீரனங்கே,


எங்கள் அனுமன் எங்கே

என்றும் அனுமன் இங்கே

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்