அழகன் அவன்
செந்தூர் முருகன் அழகன் அவன்
சேவற்கொடியோன் அழகன் அவன்,
கையில் வேலுடன் கந்தன் அவன்
காட்சி தந்தான் கந்தன் அவன்,
மலரின் கிரீட மன்னன் அவன்,
வள்ளியின் காதல் மணவாளன்,
கள்ளம் இல்லா செல்வன் அவன்,
கருணை வடிவம் கந்தன் அவன்,
அழகு மயிலின்தோகை அவன்
அற்புதம் செய்யும் கலைஞன் அவன்,
மண்ணைக் காக்க விண்ணில் பறந்து
விரைந்து வந்திடும் வீரன் அவன்
Comments
Post a Comment