மீனாட்சி
பச்சை வண்ண பட்டுடுத்தி;
பாடும் கிளியை விரல் நிறுத்தி;
உச்சியில் பொன்முடி பின்னிருத்தி;
ஊரை காப்பவள் மீனாட்சி!
அழகாய் வைர மூக்குத்தி;
ஆடும் அதிசய புல்லாக்கு;
எடுப்பாய் நெற்றியில் ஒரு பொட்டு;
ஏன் என்று கேட்கும் முகவெட்டு!
அண்ணன் அழகன் கரையிறங்கி;
கைத்தலம் தந்தான் மனங்கலங்கி;
சொக்கன் ஈசன் உடன் மயங்கி;
ஊரை காப்பவள் மீனாட்சி!
Comments
Post a Comment