ஈசன் அருளால் இனியில்லை
இன்னல் இல்லை இனியில்லை
ஈசன் அருளால் இனியில்லை
இடப வாகனம் மீதமர்ந்த
ஈசன் அருளால் இனியில்லை,
உள்ளம் தந்தான் உடுக்கை கொண்டான் கள்ள மில்லா கையிலை நாயகன்
இனி காலமெல்லாம் கவலை இல்லை இனிஇல்லை,
மங்கையுடன் பிறை கங்கையுடன்
கந்தனுடன் பிள்ளை கணேசனுடன்
காட்சிதந்தான் கருணையுடன்
காவல் கொண்டான் இனி கவலையில்லை,
இல்லை இல்லை துன்பமில்லை
ஈசன் அருளால் துன்பமில்லை
Comments
Post a Comment